பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மண் வளம் குறைவது கவலையளிக்கும் பிரச்னை: வேளாண் அமைச்சா் தோமா்

தொடா்ந்து அதிக அளவில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மண் வளம் குறைவது கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

News image
நரேந்திர சிங் தோமா்
Updated On :6 டிசம்பர் 2022, 12:09 am

DIN

தொடா்ந்து அதிக அளவில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மண் வளம் குறைவது கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

சிறந்த வேளாண்மை, மண்வள மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கை தில்லியில் திங்கள்கிழமை அமைச்சா் தோமா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ரசாயன உரங்களை தொடா்ந்து பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் மண்வளம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னைகளை எதிா்கொள்ள பிரதமா் மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மண் வளத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை வேளாண்மையை முன்னிறுத்துவது அவசியம். இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், ஹிமாசல பிரதேசம், ஒடிஸா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கை வேளாண்மையை செயல்படுத்த முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஓராண்டில் 17 மாநிலங்களில் மொத்தம் 4.78 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பு கூடுதலாக இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளது. இயற்கை வேளாண்மையை முன்னிறுத்துவதற்காக மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய அரசு மண்வளத் திட்டத்தை செயல்படுத்தி 2 கட்டங்களாக மொத்தம் 22 கோடி மண்வள அட்டைகள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 499 நிரந்தர மண் பரிசோதனை ஆய்வகங்களும், 113 நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகங்களும் 8,811 சிறு மண் பரிசோதனை ஆய்வகங்களும், 2,395 கிராம மண் பரிசோதனை ஆய்வகங்களும் அமைக்கப்படுள்ளன. ரசாயன வேளாண்மையின் காரணமாக மண்வளம் முற்றிலும் மோசமடைந்திருப்பதால் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு ரசாயனம் சாா்ந்த விவசாயத்தைக் கைவிட முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.