உலகின் முழு கவனத்தை ஈர்த்துள்ளது ஒற்றுமை நடைப்பயணம்: கெலாட்!

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை தெரிவித்தார். 
உலகின் முழு கவனத்தை ஈர்த்துள்ளது ஒற்றுமை நடைப்பயணம்: கெலாட்!
உலகின் முழு கவனத்தை ஈர்த்துள்ளது ஒற்றுமை நடைப்பயணம்: கெலாட்!

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை தெரிவித்தார். 

ராஜஸ்தானில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் முதல்நாளான இன்று பாலி போர்டா சந்திப்பான ஜலாவர் மாவட்டத்தில் தொடங்கியது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், 

இந்த பயணம் நிறைவடையும்போது, நடைப்பயணத்தில் வரும் இளைஞர்கள் ராகுல் காந்தியின் சொத்தாக நிரூபிப்பார்கள். 

செப்டம்பர் 7-ம் தேதி யாத்திரையின் தொடக்கத்தில் இருந்து காந்தியுடன் வந்த 10 பாரத யாத்ரீகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த நடைப்பயணம் நாட்டின் கவனத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஈர்க்கிறது. 

ஜனநாயகம் உள்ள நாடுகளுக்கு இது ஒரு பெரிய செய்தி. ஜனநாயகம் இல்லாதவர்களுக்கு, காந்தி உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் நடப்பவர் என்றும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களை நடைப்பயணத்தில்  சேருமாறு வலியுறுத்துகிறார் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் கவலையில் இருக்கும் நேரத்தில் இந்த யாத்திரை நடைபெறுகிறது. ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த நடைப்பயணத்தை நடத்தும் முடிவை ராகுல் எடுத்ததால், அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com