குஜராத்தில் 2 தொகுதிகளில் வென்றாலும் அது ஆம் ஆத்மிக்கு இமாலய வெற்றிதான்! காரணம்?

குஜராத் மற்றும் ஹிமாசல் சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 
குஜராத்தில் 2 தொகுதிகளில் வென்றாலும் அது ஆம் ஆத்மிக்கு இமாலய வெற்றிதான்! காரணம்?
குஜராத்தில் 2 தொகுதிகளில் வென்றாலும் அது ஆம் ஆத்மிக்கு இமாலய வெற்றிதான்! காரணம்?


புது தில்லி: குஜராத் மற்றும் ஹிமாசல் சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை நோக்கி பாஜகவும், ஹிமாசலில் வெற்றிக் கனியை நெருங்கும் வேகத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் பாஜக 150க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இங்கு காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை அடைந்துள்ளது. பாஜக வரலாறு காணாத வெற்றியை ருசிக்கத் தயாராகி வருகிறது. ஹிமாசலில் காங்கிரஸ் 36 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அங்கு ஆம் ஆத்மிக்கு ஓரிடத்திலும் முன்னிலை கிடைக்கவில்லை. இது வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணி நிலவரம்.

ஆம் ஆத்மிக்கு இமாலய வெற்றி
குஜராத் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. ஒரு வேளை, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, குறிப்பிட்ட சதவிகித வாக்கினைப் பெற்றாலும் கூட அது அக்கட்சிக்கு இமாலய வெற்றியாகவே கருதப்படும்.

அது மட்டுமல்ல, அக்கட்சி ஒரு மிக முக்கிய இடத்தைப் பிடிக்கவும் காரணமாக அமையும்.

அதாவது, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 6 சதவீத வாக்குகளைப் பெற்று, குறைந்தது இரண்டே இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றினால் கூட போதும். அது தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை எட்டிவிடும்.

தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மிதான் ஆளுங்கட்சி. அது மட்டுமல்லாமல், கோவாவிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 6 சதவீத வாக்குகளையும், இரண்டு எம்எல்ஏக்களையும் வைத்திருக்கிறது. எனவே, தேர்தல் விதிமுறைப்படி, எந்தவொரு கட்சி 4 மாநிலங்களில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளைப் பெற்று, குறைந்தது 2 எம்எல்ஏக்களை வைத்திருக்கிறதோ, அது தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை அடைந்துவிடும்.

எனவே, குஜராத்தில் குறைந்தது 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றாலும் கூட, அது அக்கட்சிக்கு தேசியக் கட்சி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்துவிடும். எனவே, இது ஒரு மிக முக்கிய வரலாற்றுச் சிறப்பான வெற்றியாகவே அக்கட்சியால் கொண்டாட்டத்துக்குரியதாக இருக்கும்.

ஏற்கனவே, தில்லியில் மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவும் கொண்டாட்டத்துக்கு காரணமாக மாறிவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com