குஜராத்தில் புதிய ஆட்சி அமைக்கும்பொருட்டு முதல்வர் பூபேந்திர படேல் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
குஜராத் சட்டப்பேரவைக்கான 182 இடங்களில் 156 இடங்களில் பாஜக வெற்றி பெற்று வரலாற்று சாதனையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
ஆம் ஆத்மி 5 இடங்களிலும், சமாஜவாதி ஒரு இடத்திலும், சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பூபேந்திர படேல் வெற்றி பெற்று முந்தைய முதல்வர்கள் சாதனையை முறியடித்திருக்கிறார்.
இதையும் படிக்க | டிச. 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு!
இதையடுத்து வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்பார் என்று மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.
இந்நிலையில், குஜராத்தில் புதிய ஆட்சி அமைக்கும்பொருட்டு முதல்வர் பூபேந்திர படேல், இன்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
மாநிலத்தில் பாஜக தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2-ஆவது மாடியிலிருந்து விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயம்

சொக்கம்பட்டி அருகே விபத்தில் சிக்கியவரை மீட்க உதவிய எம்எல்ஏ!

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

புளியங்குடி அருகே காா் மோதியதில் யுகேஜி மாணவி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

