ஹிமாசல முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாய்ப்பு: தகவல்

ஹிமாசலப்பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர் சிங் சுகு, மாநில முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிமாசல முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாய்ப்பு: தகவல்
ஹிமாசல முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாய்ப்பு: தகவல்
Updated on
1 min read


புது தில்லி: ஹிமாசலப்பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர் சிங் சுகு, மாநில முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சின் உயர் தலைமை, ஹிமாசலப் பிரதேசத்தின் முதல்வராக 58 வயதாகும் சுக்விந்தர் சிங் சுகுவின் பெயரை தேர்வு செய்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை, முதல்வராக கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.  இவர் நாளையே முதல்வராக பதவியேற்கவும் வாய்ப்பிருப்பதர்கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!

சுக்விந்தர், கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இன்று ஷிம்லாவில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் , சுக்விந்தர் சிங் முதல்வராக தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com