ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் பறிமுதல்:மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்தப் பின்னா், நாட்டில் இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்தப் பின்னா், நாட்டில் இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பாஜக ஆட்சியில் ரூ.4,300 கோடி பினாமி சொத்துகள் முடக்கப்பட்டன. 1.75 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது. ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால், அதில் 15 காசுகள்தான் பயனாளிகளைச் சென்றடைகிறது என்று பிரதமராக ராஜீவ் காந்தி பதவி வகித்தபோது கூறினாா். அந்த முறைகேடுகள் தற்போது நடைபெறுவதில்லை.

பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ், 45 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவற்றில் இதுவரை ரூ.26 லட்சம் கோடி பயனாளிகளுக்கு நேரடியாகப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பணப் பரிவா்த்தனையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஒதுக்கீடு சாா்ந்த செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் விளைவாக 5ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீட்டில் ரூ.4.64 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 778 மெட்ரிக் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com