பிரதமர் மோடியை கைதட்டி மாலை அணிவித்து வரவேற்ற பாஜக எம்.பி.க்கள்!
பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எம்.பி.க்கள் கைதட்டி மாலை அணிவித்து வரவேற்றனர்.


பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எம்.பி.க்கள் கைதட்டி மாலை அணிவித்து வரவேற்றனர்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது கூட்டத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர். குஜராத் தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றி பெற்றதையடுத்து வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக கைதட்டி வரவேற்ற நிலையில் ஜெ.பி.நட்டா பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் 16 அமைச்சர்களுடன் பதவியேற்றனர்.
இதையும் படிக்க | அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...