தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மம்தா ஒரு 'பெண் புலி' - திரிணமூலில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பேச்சு 

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மஜீத் மேனன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். 

News image
Updated On :14 டிசம்பர் 2022, 11:29 am

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மஜீத் மேமன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். 

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான மஜீத் மேமன், தனிப்பட்ட காரணங்களினால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர். மாநிலங்களவையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கவில்லை என அவர் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

Story image

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திரிணமூல் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சௌகதா ராய் முன்னிலையில் மஜீத் அந்த கட்சியில் இணைந்தார். 

Story image

பின்னர் பேசிய அவர், கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை 'பெண் புலி' என்று வர்ணித்தார்.

'மம்தாவின் குரல் மேற்குவங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஒலிக்கிறது. குறைபாடுகள் இருந்தாலும், பணம் மற்றும் பலத்தால் சவால் விடுகிறார். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நேரத்தில் திரிணமூல் தான் மத்திய அரசுக்கு சவால் விடுகிறது' என்று கூறினார்.

மேலும், ஜனநாயகம் மற்றும் நாட்டின் நெறிமுறைகளைப் பாதுகாக்கவே திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததாகத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.