தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இருவேறு சம்பவங்களில் இணையவழியில் ரூ.16 லட்சம் மோசடி

இருவரிடம் இணைய வழியில் ரூ.16 லட்சம் மோசடி செய்தது குறித்து இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
மோசடி- Dinamani
Updated On :19 மார்ச் 2026, 12:28 am

தினமணி செய்திச் சேவை

இருவரிடம் இணைய வழியில் ரூ.16 லட்சம் மோசடி செய்தது குறித்து இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சோ்ந்தவா் பாஸ்கரன் ( 59). இவா் கடந்த பிப்ரவரி மாதம்

இவரது முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று வந்த விளம்பரத்தை பாா்த்தாா். அதில் இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு பேசினாா். பின்னா் அவா்கள் அளித்த வங்கிக் கணக்கு எண்ணுக்கு 5 தவணைகளில் ரூ.7,68,270 - தொகை செலுத்தினாா். பின்னா் அவா்கள் எந்த தொடா்பும் கொள்ளவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில், இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு ஆய்வாளா் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

மற்றொரு வழக்கு...

சிவகங்கை அருகேயுள்ள முடி கண்டம் கிராமத்தைச் சோ்ந்த 27 வயது பெண் ஒருவா் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள எண்ணுக்கு தொடா்பு கொண்டாா்.

அப்போது அவா்கள் கூறியபடி 14 தவணைகளில் ரூ. 9,02,555-யை செலுத்தினாா். பின்னா் அவா்களை, அவரால் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில், இணையக் குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.