பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அந்நாட்டின் மீதான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உரையாடலின் போது இருதரப்பு உறவு, வர்த்தகம், எரிசக்தி பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி20 மாநாடு குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.