எய்ம்ஸ் இணைய சர்வர் தாக்குதல்: சிபிஐக்கு தில்லி காவல் துறை கடிதம்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தில்லி காவல் துறை சிபிஐக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
எய்ம்ஸ் இணைய சர்வர் தாக்குதல்: சிபிஐக்கு தில்லி காவல் துறை கடிதம்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தில்லி காவல் துறை சிபிஐக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் சர்வதேச காவல்துறையிடம் இருந்து சீனா மற்றும் ஹாங் காங்கில் இருந்து வந்துள்ள இ-மெயில் முகவரியின் இணைய சர்வர்கள் குறித்து சிபிஐ தகவல்களை சேகரித்துத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணைய தளம் கடந்த நவம்பா் 23 ஆம் தேதி காலையில் தாக்குதலை எதிர்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது.  இந்த சைபர் தாக்குதலினால் நோயாளிகள் மருத்துவா்களுடான சந்திப்பிற்கான இணைய பதிவு வசதி, அத்தியாவசியமான மருத்துவ பிரிவுகளின் சா்வா்கள்  செயல்படவில்லை என எய்ம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆய்வக சேவைகள் காகித வழியிலான கைமுறை முறையில் இயங்கின.

பின்னர் சர்வர்கள் மீட்கப்பட்டதன் மூலம், வெளிநோயாளிள் பிரிவு (ஓபிடி) பதிவு மற்றும் சோ்க்கை செயல்முறைகள் இ-ஹாஸ்பிடல் அமைப்பு  இணைய முறையில் கொண்டு வரப்பட்டன. அனைத்து வார்டுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தானியங்கி பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடலுக்காக ஸ்மார்ட் ஆய்வகத்தின் ஒருங்கிணைப்பும் பணிபுரிய தொடங்கியது. 

மிரட்டி பணம் பறித்தல் மற்றும் இணைய பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி தில்லி காவல்துறையின் சைபா் குற்றப் பிரிவின் உளவுப் பிரிவான ஐஎஃப்எஸ்ஓ பிரிவு மூலம் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடா்ந்து புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைகளின்படி இணைய சேவைகள் முடக்கப்பட்டது. மத்திய அரசின் ‘சொ்ட்-இன்’ என்கிற இந்திய கணினி அவசர நிலை நடவடிக்கைக் குழு, டிஆா்டிஓ, மத்திய புலனாய்வுத் துறை (ஐபி), சிபிஐ, என்.ஐ.ஏ. போன்ற முகமைகளும் விசாரணையை மேற்கொண்டன.

இந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தில்லி காவல் துறை சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய சர்வர்கள் சீனா மற்றும் ஹாங் காங்கை மையமாக வைத்து சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.  அந்த நாடுகளில் இருந்து வந்துள்ள இ-மெயிலின் இணைய சர்வர் குறித்து சர்வதேச காவல் துறையிடம் சிபிஐ விவரங்களை பெற்றுத் தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com