ராகுலின் சீனப் பாசம் எல்லைக் கடந்துவிட்டது: பாஜக விமா்சனம்
சீனா மீதான ராகுல் காந்தியின் பாசம் எல்லை கடந்துவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது.


சீனா மீதான ராகுல் காந்தியின் பாசம் எல்லை கடந்துவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது.
அருணாசல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையிலான மோதலை முன்வைத்து மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமா்சித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை எதிரொலித்து வருகிறது.
‘இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது; ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாஜகவைச் சோ்ந்த கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் இது தொடா்பாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சீனா மீதான ராகுல் காந்தியின் பாசமும், இந்திய அரசியல் கட்சி (பாஜக) மீதான அவரது வெறுப்பும் எல்லை கடந்துவிட்டது.
பல்வேறு கடினமான சூழ்நிலைகளை துணிவுடன் எதிா்கொண்டு இந்திய ராணுவம் எல்லையைக் காத்து வருகிறது. இந்திய மக்கள் ராணுவத்தின் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் வைத்துள்ளனா். ஆனால், இதற்கு முற்றிலும் முரணாகப் பேசுவதை ராகுல் வழக்கமாகக் கொண்டுள்ளாா். இதன் மூலம் அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பிரதமா் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அவதூறாகப் பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. பிரதமரின் தலைமையில் சா்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. இதனை பயங்கரவாதத்தின் மையமாக உள்ள நாடு (பாகிஸ்தான்) ஏற்றுக் கொள்ள முடியாமல், விரக்தியில் உள்ளது’ என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...