சோகத்தில் முடிந்த கால்பந்து உலகக்கோப்பை கொண்டாட்டம்!

உலகக்கோப்பை கால்பந்து கோப்பை இறுதிப்போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

உலகக்கோப்பை கால்பந்து கோப்பை இறுதிப்போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொண்டாட்டத்தின்போது மர்ம நபர் வைத்திருந்த துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில், குண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. எனினும் இறந்த பெண்ணின் வீட்டின் சுவர்களில் இரண்டு குண்டுகள் வெடித்து சிதறிய தடங்களைக் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி உலகக் கோப்பையை வென்றது.

உலகம் முழுவதுமுள்ள ஆர்ஜென்டீனா அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடினர். அந்தவகையில் மணிப்பூர் மாநிலத்தின் கிழக்கு இம்பால் பகுதியில் உலகக்கோப்பை வெற்றியை மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தும் வீதிகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அப்போது துப்பாக்கி குண்டு பட்டதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார். 

இந்நிலையில், இது குறித்து பேசிய மணிப்பூர் காவல் துறையினர், உயிரிழந்த பெண்ணின் வீட்டு சுவரில் இரண்டு குண்டுகள் பதிந்த தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு குண்டு பெண்ணின் உடலில் பாய்ந்துள்ளது. தடவியல் துறையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.  

இந்நிலையில், குற்றவாளிகள் யார் என்பது குறித்து தெரியவரும் வரை, இறுதி சடங்குகளை நடத்தப்போவதில்லை என உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com