கருத்தரிக்க....இந்த டயட் முறையைப் பின்பற்றுங்கள்!

கருத்தரிக்க முடியாதவர்கள் மெடிட்டரேனியன் டயட் முறையை மேற்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கருத்தரிக்க....இந்த டயட் முறையைப் பின்பற்றுங்கள்!

கருத்தரிக்க முடியாதவர்கள் மெடிட்டரேனியன் டயட் முறையை மேற்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மெடிட்டரேனியன் டயட்.. உணவு உட்கொள்ளுதலில் இன்று பலவகையான முறைகளும் அதற்கு பெயர்களும் வந்துவிட்டன. மாறிவரும் உலகத்தில் உணவு முறைகளிலும் வெகுவான மாற்றங்கள் ஏற்பாட்டுக் கொண்டிருக்கின்றன. இதனாலே நோய்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அந்த வகையில் உடல்நலன் கருதி இன்று டயட் முறைகளும் வெகுவாகப் பேசப்படுகின்றன. உடல் எடையைக் குறைக்க, கூட்டுவதற்கு, உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு என்று டயட் முறைகள் வகுக்கப்படுகின்றன. 

அதில் ஒன்றுதான் மெடிட்டரேனியன் டயட். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், தானியங்கள், நட்ஸ் வகைகள், மீன், இறைச்சி, பன்னீர் உள்ளிட்ட சில பால் பொருள்கள் உள்ளிட்டவை சேர்ந்ததே இந்த மெடிட்டரேனியன் டயட். 

மெடிட்டரேனியன் டயட் மேற்கொள்பவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்த புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் அதிகமிருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து ஆரோக்கியமாக வைக்கின்றன. இதனால் உடலில் உள்ள பிரச்னைகள் குறைகிறது. 

இந்நிலையில், மெடிட்டரேனியன் டயட் மேற்கொள்பவர்களுக்கு கருத்தரித்தல் எளிதாக நடைபெறும் என்றும் கருத்தரிக்க முடியாதவர்கள் மெடிட்டரேனியன் டயட் முறையை மேற்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவது கருவுறுத்தலுக்கான சிகிச்சைகளிலும் உதவும் என்று தெரிவிக்கின்றனர்.

மோனாஷ் பல்கலைக்கழகம், சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்த டயட் உணவுகள் ஆணின் விந்தணுக்களின் தரம், கருவுறுதல் மற்றும் செயற்கை கருத்தரித்தலுக்கு உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

கருவுறாமை என்பது தற்போது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த ஆய்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com