உத்தரப் பிரதேசத்தில் வெப்பநிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கிக் கிடக்கின்றனர். இதில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்கும் வகையில், நிவாரண உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் போர்வைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், அவற்றின் விலையில் சீரான தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார்.
அதேசமயம், போர்வைகள் கொள்முதலில் உள்ளூர் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், நிவாரணப் பொருள்களை உள்ளூர் எம்.பி., எம்எல்ஏ.க்கள், தலைவர்கள், பிரதிநிதிகளால் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும். நிர்வாக அதிகாரிகளும் உதவியைச் செய்வார்கள்.
அனைத்து நகரங்களிலும் இரவு தங்குமிடங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்குவதைப் பார்க்கக்கூடாது என்றார்.
இரவு தங்குமிடங்களில் சுத்தம் மற்றும் சுத்திகரிப்பைத் தவிர படுக்கைகள் மற்றும் பாதுகாப்பையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

360 கோணத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன்; தலை வணங்குகிறேன்: முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர்

தமிழ்நாடு தேர்தல்! கிராமங்களை சமநிலை செய்த நகரங்கள்!

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


