மொராதாபாத்தில் கடும் மூடுபனி: 32 ரயில்கள் ரத்து!
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் கடும் மூடுபனி காரணமாக, குறைந்த பார்வைத்திறன் இருந்ததால் 32 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் கடும் மூடுபனி காரணமாக, குறைந்த பார்வைத்திறன் இருந்ததால் 32 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிபிஆர்ஓ வடக்கு ரயில்வேயின் தகவலின்படி,
மொராதாபாத்தில் அடர்த்தியான மூடுபனி காரணமாக 32க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி வரை மூடுபனி மிகவும் அடர்த்தியாக இருந்ததால், ரயில்களில் சில ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில ரயில்கள் தாமதமும் ஆகியுள்ளன.
பகல்பூர்-ஆனந்த் விஹார் விக்ரம்ஷல்லா மற்றும் பரௌனி-புது தில்லி ஆகிய சிறப்பு ரயில்கள் ஐந்து மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.
ராஜேந்திரநகர்-புது தில்லி ராஜ்தானி மற்றும் ராஜேந்திரநகர்-புது தில்லி சம்பூர்ண கிராந்தி ஆகியவை 3 மணிநேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.
பனாரஸ்-புது தில்லி சூப்பர்பாஸ்ட், இஸ்லாம்பூர்-புது தில்லி மகத் எக்ஸ்பிரஸ் மற்றும் திப்ருகர்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகியவை தலா இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சஹர்சா-புது தில்லி வைஷாலி எக்ஸ்பிரஸ் மற்றும் சீல்டா-புது தில்லி ராஜ்தானி மற்றும் தர்பங்கா-புது தில்லி குளோன் எக்ஸ்பிரஸ் ஆகியவை முறையே 3:30, 1:30 மற்றும் 2:34 மணி நேரம் தாமதமாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...