கெலாட் - பைலட் குறித்து விரைவில் நல்ல செய்தி வெளியாகும்: ராகுல்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான சமசரம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான சமசரம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 

அல்வாரில் திங்களன்று  ராகுல் காந்தி அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுடன் சந்திப்பு நிகழ்த்தினார். இரு மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே சமரசம் செய்ய முயற்சித்து வருவதாக அவர் கூறினார். 

இந்த கூட்டத்தில் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், பவன் கெடா, திகரம் ஜூலி, பன்வர் ஜிதேந்திர சிங் மற்றும் சகுந்தலா ராவத் ஆகிய மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். 

முன்னாள் காங்கிரஸ் தலைவரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் ஒன்றரை மணி நேரம் சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த ராகுல், காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

மேலும், இரண்டு நாள்களில் ராஜஸ்தானில் இருந்து தில்லிக்குச் செல்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் விவாதித்தார். 

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, "நல்ல செய்தி விரைவில் வரும்" என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, முதல்வரும்,  முன்னாள் துணை முதல்வருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக ‘வியூகங்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com