கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு விருந்து: 18 வகை தினை உணவுகள்!

சர்வதேச தினை ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மதிய உணவாக தினை உணவுகள் வழங்கப்படவுள்ளன.

News image

படம்: ஏஎன்ஐ

Updated On :20 டிசம்பர் 2022, 7:26 am

DIN

சர்வதேச தினை ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மதிய உணவாக தினை உணவுகள் வழங்கப்படவுள்ளன.

2023-ஐ சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று மதிய உணவை வழங்குகிறார்.

இந்த விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், மதிய உணவு வகைகள் அனைத்தும் தினை வகைகளை கொண்டு சமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து பிரபல சமையல் கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

மதிய உணவாக ராகி தோசை, ராகி ரொட்டி, தினை தயிர் சாதம், ராகி அல்வா, தினை வகைகளாலான கேக், குளிர்பானங்கள் என 18 வகை உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, சர்வதேச தினை ஆண்டை கொண்டாடுவது குறித்தும், தினை குறித்த பிரசாரத்தை மேற்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதாகவும், இந்திய அரசின் கடிதத்தை ஏற்று, சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.