தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சீன எல்லை விவகாரம்: காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இன்றும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

News image
Updated On :23 டிசம்பர் 2022, 4:33 am

DIN

சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இன்றும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அருணாச்சல பிரதேச எல்லையில் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய - சீனப்படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது. 

மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தபோதிலும்,சீன எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் இன்றும்(வெள்ளிக்கிழமை) சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இன்றும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் தொடர்ந்து எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.