முன்னாள் பிரதமர்கள் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி!

மறைந்த முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் மற்றும் மகாத்மா காந்தி நினைவிடங்களில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மலர்தூவி மரிய
முன்னாள் பிரதமர்கள் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி!
Published on
Updated on
2 min read

 
மறைந்த முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் மற்றும் மகாத்மா காந்தி நினைவிடங்களில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பா் 25-ஆம் தேதி, தேசிய நல்லாட்சி தினமாக கடந்த 2014-இல் மத்திய பாஜக அரசால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள ‘ஸதைவ அடல்’ எனப்படும் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி திங்கள்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

 
பின்னர், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தில்லியில் உள்ள ‘ஸதைவ அடல்’ எனப்படும் வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு சாந்தி வேனிலும், இந்திரா காந்திக்கு சக்தி ஸ்தலத்திலும், வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திலும் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com