கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி விமான நிலையத்தில்: ரூ.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சி விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட பசை வடிவிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :26 டிசம்பர் 2022, 6:57 am

திருச்சி: ஷார்ஜாவிலிருந்து இருந்து முறைகேடாக கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது உடலுக்குள் மறைத்து 845 கிராம் தங்கத்தைக் (பசை வடிவில்) கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.46.37 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.