மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ‘இணைய விளையாட்டுகள்’

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ‘இணைய விளையாட்டுகள்’

இணையவழி விளையாட்டுகளை நிா்வகிக்கும் பொறுப்பு மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இணையவழி விளையாட்டுகளை நிா்வகிக்கும் பொறுப்பு மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இணையவழி விளையாட்டுகள் பிரிவானது மத்திய இளைஞா் நலன்-விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டுத் துறையிடம் இருந்தது. இந்நிலையில், இணையவழி விளையாட்டுகள் பிரிவின் நிா்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் அப்பிரிவு தற்போது மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்காக அலுவல் ஒதுக்கீடு விதிகளில் மத்திய அரசு அண்மையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடா்பாக மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்க நடவடிக்கைகளுக்கு அரசு தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது. அதே வேளையில், தொழில்நுட்ப வாய்ப்புகள் சட்டவிரோதச் செயல்களில் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

இணையவழி விளையாட்டுகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை அமைச்சகம் விரைவில் வெளியிடவுள்ளது. அது தொடா்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபிறகு விதிகள் இறுதிசெய்யப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கூட்டமைப்பு வரவேற்பு:

இணையவழி விளையாட்டுகளுக்கான நிா்வாகப் பொறுப்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதை இந்திய இணைய விளையாட்டுகள் கூட்டமைப்பு (எஃப்ஐஎஃப்எஸ்) வரவேற்றுள்ளது. இந்நடவடிக்கை நிறுவனங்களுக்குக் கூடுதல் தெளிவையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்தும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதன் மூலமாக இணையவழி விளையாட்டுகள் துறையில் முதலீடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். இணையவழி விளையாட்டுகளில் இந்தியாவை உலகின் முக்கிய மையமாக மாற்றவும் இந்த நடவடிக்கை உதவும் என நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com