எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குப்பைக் கிடங்குகளை அகற்ற ஆம் ஆத்மிக்கு 15 ஆண்டுகள் ஆகாது: பாஜகவை விமர்சித்த சிசோடியா! 

தில்லியில் குப்பைக் கிடங்குகள் அகற்றப்படுவதை ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் உறுதி செய்வார்கள் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். 

News image
குப்பைக் கிடங்குகளை அகற்ற ஆம் ஆத்மிக்கு 15 ஆண்டுகள் ஆகாது: பாஜகவை விமர்சித்த சிசோடியா! 
Updated On :28 டிசம்பர் 2022, 9:51 am

DIN

தில்லியில் குப்பைக் கிடங்குகள் அகற்றப்படுவதை ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் உறுதி செய்வார்கள் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். 

இதுதொடர்பாக சிசோடியா கூறுகையில், 

தில்லியில் குப்பைக் கிடங்குகளின் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். இதற்காக அடுத்த மாதம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பதை ஆம் ஆத்மி உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார். 

பரிந்துரைக்கப்பட்ட ஆம் ஆத்மியின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களுடன் ஷெல்லி ஓபராய் மற்றும் ஆலி முகமது இக்பால் ஆகியோர் ஆக்லா குப்பைக் கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பதவியேற்பதற்கு முன்பே வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டனர். பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். ஜனவரி 6ஆம் தேதிக்குப் பிறகு ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இதை உறுதி செய்வார்கள். 

குப்பைக் கிடங்கின் அகற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு வாரமும் பார்வையிட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

தொடர்ந்து மூன்று முறை மாநகராட்சி தேர்தலில் இருந்த பஜாகவை விமர்சித்த சிசோடியா, குப்பைக் கிடங்குகளை அகற்ற ஆம் ஆத்மிக்கு 15 ஆண்டுகள் ஆகாது என்றார். 

எங்களது இந்த முயற்சிகள் குப்பைக் கிடங்குக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதியை அளிக்கும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.