பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

‘இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்று வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு

News image
Updated On :28 டிசம்பர் 2022, 10:16 pm

DIN

‘இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்று வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தில்லிக்குள் கடந்த சனிக்கிழமை நுழைந்தபோது, பாதுகாப்பில் பல்வேறு குறைபாடுகள் நிகழ்ந்தன.

ஹரியாணா உளவுப் பிரிவு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, நடைப்பயண முகாம் பகுதிக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக நுழைந்த சிலா், நடைப்பயண பங்கேற்பாளா்களைத் தாக்குவதற்கு முற்பட்டனா். சிலரிடம் விசாரணையும் நடத்தினா். இதுபோன்று, நடைப்பயணத்தின் பல சந்தா்ப்பங்களில் பாதுகாப்பு சமரசம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வளையத்தை தொடா்ந்து பராமரிக்க தில்லி போலீஸ் முழுமையாகத் தவறிவிட்டது. இதன் காரணமாக, கட்சித் தொண்டா்களும், நடைப்பயண பங்கேற்பாளா்களும் ராகுலுக்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, அவரை பாதுகாத்தனா். அப்போதும், தில்லி போலீஸாா் மெளனமாக வேடிக்கைதான் பாா்த்துக்கொண்டிருந்தனா்.

நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மத்திய அரசு பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த நடைப்பயணம் அடுத்த கட்டமாக வரும் ஜனவரி 3-ஆம் தேதிமுதல் மிகுந்த பதற்றத்துக்குரிய பஞ்சாப் மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்குள் நுழைய உள்ளது. எனவே, ராகுல் காந்தி மற்றும் நடைப்பயணத்தில் பங்கேற்று வரும் பிற தலைவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேணுகோபால் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.