கேரளத்தின் மூணாறில் வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது
கேரளத்தின் மூணாறில் வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது

கேரளத்தின் மூணாறில் வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது

கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாறு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது.

இடுக்கி: கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாறு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது.

இந்த குளிர்காலத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக இது பதிவாகியிருக்கிறது.

மூணாறு பகுதியில் குண்டுமலா மற்றும் தேவிகுளம் லக்கட் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்ட நிலையில், மலைமுகடுகளை வெண்பனி மூடியிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அதேவேளையில், மூணாறுக்கு அருகே வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவாகவும், செந்துவரை உள்ளிட்ட இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com