நாக்பூர்: ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மர்ம தொலைப்பேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மர்ம தொலைப்பேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இயங்கி வருகிறது. இதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து மோப்ப நாய் படை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க வைக்கும் படை ஆகியவை வரவழைக்கப்பட்டு வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க- தேர்தல் ஆணையம் கடிதம்: திருப்பி அனுப்பிய அதிமுக தலைமை அலுவலகம்
அதேசமயம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பு எண்ணை வைத்து மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...