மத்திய பட்ஜெட்டில் பொதுத் துறை தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-லுக்கு ரூ.44,720 கோடி கூடுதல் மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2022-23 நிதியாண்டில் பிஎஸ்என்எல்-லுக்கு அளிக்கப்படும்.
இது தொடா்பாக பட்ஜெட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
4ஜி அலைக்கற்றை வாங்குவது, தொழில்நுட்பரீதியாக மேம்படுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றுக்காக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.44,720 கோடி கூடுதல் நிதி அளிக்க இருக்கிறது. இது தவிர ரூ.7,443.57 கோடி நிதியுதவியும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். இதில் ஊழியா்களின் விருப்ப ஓய்வுத் திட்டம், ஜிஎஸ்டி வரிக்கான செலவு ரூ.3,550 கோடியும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2019 அக்டோபரில் பிஎஸ்என்எல்-லுக்கு மத்திய அரசு ரூ.69,000 கோடி நிதியளித்தது குறிப்பிடத்தக்கது.
தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை சேவைக்கான முன்னேற்பாடுகளை செய்து வரும் நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இப்போது வரை 3ஜி அலைக்கற்றை சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் பிஎஸ்என்எல்-இல் இருந்து வாடிக்கையாளா்கள் விலகுவது தொடா்கதையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

0-6, 0-6 தோல்வியால் டென்னிஸ் ராக்கெட்டை 7 முறை தரையில் அடித்த மெத்வதேவ்..! பார்வையாளர்கள் அதிர்ச்சி!

தோல்வி பயத்தில் தரம்தாழ்ந்து பேசும் EPS! கனிமொழி எம்.பி. பேச்சு

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை!

காவல் நிலையத்தை மையப்படுத்தி புதிய இணையத் தொடர்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


