சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அக்.1 முதல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்க வாய்ப்பு

எத்தனால் மற்றும் பயோடீசலை கலக்காமல் விற்கப்படும் எரிபொருளுக்கு பட்ஜெட்டில் கூடுதலாக கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்க வாய்ப்புள்ளது

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

எத்தனால் மற்றும் பயோடீசலை கலக்காமல் விற்கப்படும் எரிபொருளுக்கு பட்ஜெட்டில் கூடுதலாக கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கரும்பு அல்லது உபரி உணவு தானியங்களில் இருந்து எத்தனால் பிரித்தெடுக்கப்படுகிறது. 90 சதவீத பெட்ரோலுடன் 10 சதவீத எத்தனால் கலக்கப்படுகிறது. நாட்டின் 75-80 சதவீத பகுதிகளில் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்படுகிறது.

அதேவேளையில், உணவுசாரா எண்ணெய் வித்துகளிலிருந்து பிரித்தெடுக்கும் பயோடீசலை டீசலில் கலக்கும் நடவடிக்கைகள் சோதனை அளவில் நடைபெற்று வருகிறது.

பெட்ரோல், டீசலுக்காக கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிக அளவில் சாா்ந்திருப்பதை குறைக்கவும், விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது பேசுகையில், ‘‘கலவையான எரிபொருளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கலவையில்லாத எரிபொருளுக்கு இந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 கலால் வரி விதிக்கப்படவுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

இதன் காரணமாக கலவையான எரிபொருள் விநியோகிக்கப்படாத பகுதிகளில் பெட்ரோல் விலை அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. தற்போது நாட்டின் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், தென்னாட்டில் உள்ள தொலைதூர பகுதிகள் மற்றும் ராஜஸ்தானில் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்படுவதில்லை.

அதேவேளையில் நாட்டில் பெரும்பாலும் கலவையில்லாத டீசல்தான் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சரின் கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பால் அக்.1 முதல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.