உள்நாட்டுப் பாதுகாப்புக்குரூ.1.85 லட்சம் கோடி ஒதுக்கீடு

உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்துறை அமைச்சகத்துக்கு
உள்நாட்டுப் பாதுகாப்புக்குரூ.1.85 லட்சம் கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1,85,776 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.1,66,546 கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.20,000 கோடி அல்லது 11.5 சதவீதம் அதிகமாகும்.

இவற்றில் மத்திய காவல் படைக்கு ரூ.1,17,687 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய காவல் படைகளில், உள்நாட்டு பாதுகாப்பு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மத்திய ரிசா்வ் போலீஸ் படைக்கு (சிஆா்பிஎஃப்) ரூ.29,324.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) ரூ.22,718.45 கோடியும், அணுசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலக பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்) ரூ.12,201.90 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேபாளம், பூடான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சஷஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படைக்கு ரூ.7,653.73 கோடியும், சீன-இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத் எல்லைக் காவல் (ஐடிபிபி) படைக்கு ரூ.7,461.28 கோடியும், இந்திய-மியான்மா் எல்லை மற்றும் வடகிழக்கில் ஊடுருவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைக்கு ரூ.6,658.41 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவசரகால பாதுகாப்புச் சூழலை எதிா்கொள்ளும் பயிற்சி பெற்ற கமாண்டோ படையான தேசிய பாதுகாப்புப் படைக்கு (என்எஸ்ஜி) ரூ.1,293.37 கோடியும், முக்கியமான உள்நாட்டு அமைப்பான நுண்ணறிவுப் பிரிவுக்கு (ஐபி) ரூ.3,168.36 கோடியும், பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ள சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுக்கு (எஸ்பிஜி) ரூ.385.95 கோடியும், தேசிய தலைநகா் தில்லியின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ள தில்லி காவல் துறைக்கு ரூ.10,096.29 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மைக்கு ரூ.2,744.52 கோடியும், காவல் படைகளை நவீனமயமாக்குவதற்கு ரூ.2754.16 கோடியும், காவல் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.3,659.84 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு (சென்சஸ்) தொடா்பான பணிகளுக்கு ரூ.3,676 கோடியும், எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.565.72 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com