ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பட்ஜெட் உரை: 4 ஆண்டுகளாக நிர்மலா சீதாராமன் எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 31 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 11:06 am

DIN


2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 31 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.

கடந்த 4 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் எடுத்துக்கொண்ட குறைவான நேரம் இது.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தார். உடன் மத்திய நிதித் துறை இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். 

இதையடுத்து, நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை காலை 10.20 மணியளவில் கூடியது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, மக்களவையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளில் விரிவடைவதற்கு அடித்தளமாக இந்த நிதிநிலை இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

11 மணியளவில் தாக்கல் செய்யத் தொடங்கிய நிர்மலா சீதாராமன் 1 மணி 31 நிமிடங்களுக்கு உரையாற்றினார். கடந்த 4 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் எடுத்துக்கொண்ட குறைவான நேரம் இது.

கடந்தாண்டு நிதிநிலை அறிக்கை மீது உரையாற்ற அவர் 1 மணி நேரம் 48 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். 2020-இல் இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். இதுவே அவர் எடுத்துக்கொண்ட அதிகபட்ச நேரம். இதற்கு முன்பாக 2019-இல் 2 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு நிதிநிலை அறிக்கை மீது அவர் உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.