டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

நாட்டில் புதிதாக 1.72 லட்சம் பேருக்கு கரோனா; 1,008 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.72 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 1,008 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 3:57 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.72 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 1,008 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை இன்று (பிப்.3) வெளியிட்டது.

அதில், புதிதாக 1,72,433 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,18,03,318-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,008 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,98,983-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 2,59,107 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,97,70,414-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 10.99 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 167.87 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.