காதலியுடன் விடுதியில் தங்க மனைவியின் ஆதார் அட்டையை பயன்படுத்திய கணவர்
குஜராத்தை சேர்ந்த அந்த கணவர், வணிகம் செய்துவருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குநராக அவரது மனைவி பதவி வகித்துவருகிறார்.


மகாராஷ்டிர மாநிலம் புணேவில் 41 வயது நபர் ஒருவர், தனது காதலியுடன் விடுதியில் தங்க தனது மனைவின் ஆதார் அட்டையை பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிஞ்சேவாடி காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமையன்று வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த அந்த கணவர், வணிக நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்திவருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குநராக அவரது மனைவி பதவி வகித்துவருகிறார்.
புகார்தாரர் தனது கணவரின் காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தியுள்ளார். இதையடுத்து, கணவர் தன்னை ஏமாற்றுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை அலுவலர், "அந்த பெண் தனது கணவரின் எஸ்யூவி காரில் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தியிருந்தார். கடந்தாண்டு நவம்பரில், வணிகப் பயணத்திற்காக பெங்களூருக்கு சென்றிருப்பதாக கணவர் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் இருக்கும் இடத்தைச் சரிபார்த்து, கார் புணேவில் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
இதையும் படிக்க | உக்ரைன் தொடா்பான தீா்மானம்: ஐ.நா.வில் இந்தியா புறக்கணிப்பு
மனைவி ஹோட்டலை தொடர்பு கொண்டபோது, அந்த நபர் தனது மனைவியுடன் விடுதியில் தங்கியிருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, மனைவியின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ஹோட்டலுக்குச் சென்றது தெரியவந்தது.
தப்பி ஓடிய கணவர் மற்றும் அவரது காதலி மீது இந்திய குற்றப் பிரிவு 419 (ஏமாற்றுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...