மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

'வேலைவாய்ப்பின்மையில் 2-வது இடத்தில் கோவா'

கோவாவின் எதிர்காலமே தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்தான் உள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

News image

பிரியங்கா காந்தி (கோப்புப் படம்)

Updated On :7 பிப்ரவரி 2022, 10:31 am

கோவாவின் எதிர்காலமே தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்தான் உள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோவாவில் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், கோவாவில் தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல், அரசியல் கட்சிகளுக்கு இடையிலானது இல்லை. கோவாவின் எதிர்காலத்திற்கானது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

அதிக மூலதனங்களையும், இயற்கை அழகையும், திறமையையும் கொண்டது கோவா. ஆனால் வேலைவாய்ப்பின்மையில் நாட்டில் கோவா இன்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.