தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காங்கிரஸில் இணைந்த திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள்!

திரிபுராவில் பதவியை ராஜிநாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் இருவரும் இன்று காங்கிரஸில் இணைந்தனர். 

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 6:15 am

DIN

திரிபுராவில் பதவியை ராஜிநாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் இருவரும் இன்று காங்கிரஸில் இணைந்தனர். 

திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் சுதீப் ராய் பா்மன், ஆசிஷ் சாஹா ஆகிய இருவரும் நேற்று தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன் பாஜகவில் இருந்தும் விலகியுள்ளனர். 

அவர்கள் இருவரும் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இன்று காலை தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டிற்குச் சென்ற அவர்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். 

Story image

இதையடுத்து இருவரும் இன்று காங்கிரஸில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதீப் ராய் பா்மன், 'இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இருந்து விலக தயாராக உள்ளனர். ஆனால், சில காரணங்களால் அவர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அனைவரும் அந்தக் கட்சி மீது ஏமாற்றத்தில் உள்ளனர். குஜராத் மற்றும் ஹிமாச்சலுடன் இணைந்து திரிபுராவிலும் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இரு பாஜக எம்எல்ஏக்கள் விலகியதை அடுத்து, 60 உறுப்பினா்களைக் கொண்ட திரிபுரா சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் 33 ஆகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.