கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லி விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் கடத்த முயன்ற பயணி ஒருவரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள சுமார் 699 கிராம் தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 6:31 am

தில்லி விமான நிலையத்தில் கடத்த முயன்ற பயணி ஒருவரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள சுமார் 699 கிராம் தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

சுங்கத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, துபாயிலிருந்து வந்த பயணியைச் சோதனை செய்ததில், இரும்பில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர் பிப்.6ஆம் தேதி துபாயிலிருந்து வந்திருந்தார். அவரது உடைமைகளைப் பரிசோதனை செய்தபோது இரும்பில் சந்தேகத்திற்கிடமான படம் 
காணப்பட்டது. இரும்பை அகற்றியதன் விளைவாக 699 கிராம் எடையுள்ள 33,50,237 ரூபாய் மதிப்புள்ள சாம்பல் நிறம் பூசப்பட்ட தங்கத்துண்டு மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மீட்கப்பட்ட தங்கம் சுங்கச் சட்டம் 110வது பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுங்கச் சட்டம் பிரிவு 104ன் கீழ் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.