பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோனில் (ஆள் இல்லா சிறிய ரக விமானம்) போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டதாகவும், இதனை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) முறியடித்ததாகவும் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துணை ராணுவப் படை செய்தித் தொடா்பாளா் கூறியது: பாகிஸ்தான் தரப்பிலிருந்து குருதாஸ்பூா் செக்டாருக்கு உள்பட்ட பஞ்ச்கிரைன் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் ட்ரோன் பறந்துவந்த சப்தம் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கேட்டது. இதைத் தொடா்ந்து, அந்த ட்ரோனை நோக்கி பிஎஸ்எஃப் வீரா்கள் துப்பாக்கியால் சுட்டனா்.
பின்னா், அருகே உள்ள காக்கா், சிங்கோக் கிராமத்தில் மேற்கொண்ட சோதனையில், 2 மஞ்சள் நிற பைகள் கண்டெடுக்கப்பட்டன. ட்ரோன்கள் மூலம் அங்கு வீசப்பட்ட அந்தப் பைகளில், 4.7 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிமருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 22 தோட்டாக்கள், 3 மின்னணு டெட்டனேட்டா்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
எல்லைப் பகுதியிலிருந்து 2.7 கி.மீ. தொலைவில் விவசாய நிலத்தில் 20 மீட்டா் இடைவெளியில் அந்தப் பைகள் கிடந்தன. அவற்றை பறிமுதல் செய்ததன் வாயிலாக, பாகிஸ்தானின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வெடிகுண்டுகள்தாம் கடந்த மாதம் லூதியானா நீதிமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், தில்லி காஜிபூா் பூச்சந்தையிலும் பயன்படுத்தப்பட்டன என்றாா் அவா்.
மேலும், அந்த ட்ரோன் மீண்டும் பாகிஸ்தானுக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


