நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 3.5%
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014-ஆம் ஆண்டுமுதல் 3 முதல் 3.5 சதவீதம் வரை உள்ளது என்று மத்திய அணுசக்தி துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.


நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014-ஆம் ஆண்டுமுதல் 3 முதல் 3.5 சதவீதம் வரை உள்ளது என்று மத்திய அணுசக்தி துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்: நாட்டில் நீண்ட கால எரிசக்தி பாதுகாப்புக்கு உள்நாட்டிலேயே மூன்றடுக்கு அணு மின்சாரத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு ஒத்துழைப்புடன் நீா் அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. அணு மின்சார உற்பத்தியை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூய்மையான மின்சாரம் கிடைக்க அணு மின் திட்ட விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
2014-ஆம் ஆண்டில் வணிக ரீதியான மின் உற்பத்தி 34,162 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இது 2021-ஆம் ஆண்டில் 43,918 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்தது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014-ஆம் ஆண்டுமுதல் 3 முதல் 3.5 சதவீதம் வரை உள்ளது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...