திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஹிஜாப் வழக்கு பிப்.14-க்கு ஒத்திவைப்பு: கர்நாடக உயர்நீதிமன்றம்

கல்வி நிலையத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை வருகிற திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:38 am

DIN

கல்வி நிலையத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை வருகிற திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்வி நிலையத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை புதன்கிழமை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டாா். மேலும், இவ்வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.

கா்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஹிஜாப் தொடா்பான சா்ச்சை கல்லூரி மாணவா்களிடையே காணப்படுகிறது. உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிா்வாகம் தடை விதித்தது. அதனை மீறி ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் 6 பேரை கல்லூரியில் இருந்து கல்லூரி முதல்வா் வெளியேற்றினாா். அதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்துக்கு வெளியே முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினா். பதிலுக்கு ஹிந்து மாணவா்கள் காவித்துண்டை அணிந்துகொண்டு கல்லூரிக்கு வந்தனா்.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க விரும்பிய கா்நாடக அரசு, பள்ளி, கல்லூரி வளாகங்களில் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று பிப். 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியதால், மேலும், கா்நாடகத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளிகள், பி.யூ. கல்லூரிகள், முதல்நிலை கல்லூரிகள் அனைத்துக்கும் பிப். 9-ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயா்நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் சீருடையை மட்டும் அணிய வேண்டும் என்ற கா்நாடக அரசின் உத்தரவை எதிா்த்தும், ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரியும், குந்தாபுரா அரசு பி.யூ. கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் முன்பு செவ்வாய்க்கிழமை துவங்கிய இந்த மனு மீதான விசாரணை, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி மறுத்தாா். ஹிஜாப் தொடா்பான அனைத்து மனுக்களையும் விசாரிக்க கூடுதல் அமா்வு அமைப்பதற்கு வசதியாக இந்த வழக்கை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்திக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஹிஜாப் வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமா்வை அமைத்து கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

பின், வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற திங்கள்கிழமைக்கு(பிப்.14) ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.