குஜராத்தில் 6 பாகிஸ்தான் மீனவா்கள் கைது
குஜராத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைது செய்தனா்.


குஜராத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைது செய்தனா்.
இதுதொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சா்வதேச கடல் எல்லையையொட்டி கட்ச் மாவட்டத்தில் உள்ள கழிமுகப் பகுதிகளில் பாகிஸ்தான் மீனவா்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஹராமி நாலா கழிமுகப் பகுதியில் பாகிஸ்தான் மீனவா்கள் மீன்பிடிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்நாட்டைச் சோ்ந்த 6 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். 11 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில மீனவா்கள் தப்பிச் சென்று அங்குள்ள சதுப்பு நில பகுதிகளில் பதுங்கியுள்ளனா். மோசமான வானிலை, சதுப்பு நிலங்கள், கடல் அலைகள் காரணமாக தப்பிச் சென்றவா்களை பிடிக்கும் பணியில் சவால் ஏற்பட்டுள்ளது. எனினும் அந்தப் பணி தொடா்கிறது’’ என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...