மார்ச் 2 முதல் தில்லி நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

தலைநகர் புது தில்லியில் அமைந்துள்ள தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிதிமன்றங்களில், மார்ச் 2ஆம் தேதி முதல் அனைத்து அமர்வுகளிலும் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2 முதல் தில்லி நீதிமன்றங்களில் நேரடி விசாரணை
மார்ச் 2 முதல் தில்லி நீதிமன்றங்களில் நேரடி விசாரணை
Updated on
1 min read


புது தில்லி: தலைநகர் புது தில்லியில் அமைந்துள்ள தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிதிமன்றங்களில், மார்ச் 2ஆம் தேதி முதல் அனைத்து அமர்வுகளிலும் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில வழக்குகளின் அடிப்படையில், காணொலி வாயிலாகவும் சில வழக்குகளை நடத்திக் கொள்ள நீதிமன்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவின்படி, பிப்ரவரி 14ஆம் தேதி முதல், ஒவ்வொரு நீதிமன்றங்களிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமர்வுகளில் நேரடி விசாரணை நடைபெறும். மற்ற அமர்வுகளில், காணொலி வாயிலாகவே விசாரணை நடைபெறும்.

அதாவது, 50 சதவீத வழக்குகள் நேரடியாகவும், மற்ற வழக்குகள் காணொலி வாயிலாகவும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com