நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அவசர சிகிச்சைப் பிரிவில் செவிலியா் சுட்டுக்கொலை: திருமணத்துக்கு மறுத்ததால் சக ஊழியா் ஆத்திரம்

மத்திய பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்ய மறுத்த செவிலியரை, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவ உதவியாளா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:24 pm

DIN

மத்திய பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்ய மறுத்த செவிலியரை, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவ உதவியாளா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் பிண்டியில் மாவட்ட மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தவா் நேஹா சந்தேல் (26). இவா் வியாழக்கிழமை இரவு அவசர சிகிசிச்சைப் பிரிவில் பணியில் இருந்தாா். அப்போது அங்கு வந்த சக ஊழியரான மருத்துவ உதவியாளா் ரித்தேஷ் சாக்யா அவரைத் துப்பாக்கியால் சுட்டாா். இதில் சம்பவ இடத்திலேயே நேஹா உயிரிழந்தாா்.

இதையடுத்து, ரித்தேஷ் காவல் துறையினரிடம் சரணடைந்தாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நேஹாவை அவா் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால், நேஹா தன்னை நிராகரித்ததுடன், வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததால் கொலை செய்ததாகவும் தெரிவித்தாா். ரித்தேஷுக்கு ஏற்கெனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நேஹாவை மிகவும் நெருங்கி வந்து அவரது தலையில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். எனவே, சம்பவ இடத்திலேயே நேஹா உயிரிழந்துவிட்டாா். இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் உள்பட வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேஹாவை கொலை செய்ய ரித்தேஷ் ஏற்கெனவே திட்டமிட்டு துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்துள்ளாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

செவிலியா் ஒருவா் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாவட்ட மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். பணியிடத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.