கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பயன்படுத்தப்படாத நிர்பயா நிதி: நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி

பெண்கள், குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிர்பயா நிதி பயன்படுத்தப்படாதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.

News image

பயன்படுத்தப்படாத நிர்பயா நிதி: நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி

Updated On :11 பிப்ரவரி 2022, 11:36 am

பெண்கள், குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிர்பயா நிதி பயன்படுத்தப்படாதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த 2012ஆம் தலைநகர் தில்லியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசால் நிர்பயா நிதியம் உருவாக்கப்பட்டது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக நிர்பயா நிதி ஒதுக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது நிர்பயா நிதி முழுவதுமாக பயன்படுத்தப்படாதது குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் 316ஆவது அறிக்கையின் மூலம், நிர்பயா நிதிக்காக மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.9549 கோடியில் இதுவரை ரூ.4241 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ரூ.2989 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு நிர்பயா நிதி பயன்படுத்தப்படாததற்கான காரணங்களை ஆராய அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.