பஞ்சாபில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்: பிரதமர் மோடி
பஞ்சாபில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.


பஞ்சாபில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி முதன்முறையாக நேரடி பிரசாரம் மேற்கொண்டார்.
ஜலந்தரில் அவர் பேசியதாவது:
"பஞ்சாபில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும். வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் பஞ்சாபில் தொடங்கப்படவுள்ளது. மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
இதையும் படிக்க | பல்லக்கில் வந்து ஜனநாயகக் கடமையாற்றிய முதியவர்கள்
தங்களுக்குள்ளேயே சண்டை போடுபவர்களால் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியுமா? காங்கிரஸ் கொள்கைகள் தொழில் துறையை அழித்துள்ளது. வேலைவாய்ப்பை பாதித்துள்ளது."
117 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சுக்தேவ் சிங் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது. ஜலந்தரில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுக்தேவ் சிங் மற்றும் அமரீந்தர் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 8-ம் தேதி காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...