ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இந்தியாவில் 32 ஆயிரமாகக் குறைந்த கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2022, 6:29 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு தரவுகள் குறித்த செய்திக் குறிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 24 சதவிகிதம் ஆகும்.

ஒரேநாளில் 346 பேர் கரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி 5,09,011 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 91,930 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,16,77,641 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 11.66 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், 
இந்தியாவில் மொத்தம் 172.95 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.