என்று மாறும் இந்த நிலை? இது கால்நடை மருத்துவமனை அல்ல!

மருத்துவ உள்கட்டமைப்பு மிக மோசமாக இருக்கும் ஒரு சில மாநிலங்களில் பிகாரும் ஒன்று. அப்பேர்பட்ட பிகார் மாநிலத்தில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையில் பதிவான விடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக
இது கால்நடை மருத்துவமனை அல்ல!
இது கால்நடை மருத்துவமனை அல்ல!
Updated on
1 min read


மருத்துவ உள்கட்டமைப்பு மிக மோசமாக இருக்கும் ஒரு சில மாநிலங்களில் பிகாரும் ஒன்று. அப்பேர்பட்ட பிகார் மாநிலத்தில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையில் பதிவான விடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிகார் மாநிலம் சிவன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பல படுக்கைகளை, தெரு நாய்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றன.

அந்த விடியோவில், ஒரு சில படுக்கைகளில் நோயாளிகள் படுத்திருக்கிறார்கள். சிலர் அமர்ந்திருக்க, ஒரு படுக்கையை மூன்று நாய்கள் ஆக்ரமித்து இருக்கின்றன. அங்கே மேலும்சில நாய்கள் அலைந்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.

இந்த விடியோ சிவன் சதர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக ஆங்கில செய்தித் தளம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும், இதே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு விடியோவும் வைரலானது. அந்த விடியோவில், நோயாளிக்கு வைக்கப்பட்ட உணவை, நாய்கள் பிடுங்கி சாப்பிடுவது பதிவாகியிருந்தது.

இது குறித்து சுகாதாரத் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு முழுக்க முழுக்க பாதுகாவலர்களின் அஜாக்ரதையே காரணம் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், அங்குப் பணியாற்றும் மருத்துவர் கூறுகையில், மருத்துவமனையில் பல கதவுகள் உடைந்திருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார். 

இந்த விடியோ சில நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு, சனிக்கிழமை வைரலாகியுள்ளது. அதைத் தொடர்ந்து உடைந்த கதவு பலகைகள் கொண்டு ஒட்டவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com