ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ம.பி.யில் வேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 4 தொழிலாளர்கள் பலி, 15 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் வேன் ஆற்றில் கவிழ்ந்ததால் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image
விநாயகர் சிலை கரைத்த போது சோகம்: கால்வாயில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் பலி
Updated On :15 பிப்ரவரி 2022, 6:32 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் வேன் ஆற்றில் கவிழ்ந்ததால் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாலம் கட்டும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று கோலராஸ் காவல் நிலைய பொறுப்பாளர் அலோக் சிங் கூறினார். 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரிட்டிலா ஹிராபூர் கிராமத்திற்கு அருகே அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், அங்குள்ள சிந்து ஆற்றில் விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். 

இறந்தவர்களில் மூன்று பேர் ஹமீத் முகமது அப்துல்லா, காஹுல் அமீன் மற்றும் ஹக்கீம் முஸ்தபா என அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.