

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,409 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 347 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாட்டில் புதிதாக 27,406 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 347 பேர் உயிரிழந்தனர்.
நேற்று ஒரேநாளில் 82,817 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 4,23,127 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 173 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.23 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.99 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.