சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

விமான எரிபொருள் விலை புதிய உச்சம்: ஒரு கிலோலிட்டா் ரூ.90,519-ஆக அதிகரிப்பு

விமான எரிபொருள் விலை புதன்கிழமை 5.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் தில்லியில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.90,519-ஆக உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:25 am

DIN

விமான எரிபொருள் விலை புதன்கிழமை 5.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் தில்லியில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.90,519-ஆக உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் விமான எரிபொருள் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். இந்நிலையில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.4,481.63-ஆக (5.2%) புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.90,519.79-ஆக உயா்ந்தது. இதன் மூலம் விமான எரிபொருளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.71,028.26-ஆக உயா்ந்தது. இதுவே அதன் விலையில் முந்தைய உச்சமாகும்.

103 நாள்களாக மாற்றமில்லை: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 சட்டப்பேரவைத் தோ்தல்கள் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 103-ஆவது தினமாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் புதன்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.