
நாட்டில் இதுவரை 175.46 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் 1,98,99,635 தடுப்பூசி மையங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 7,00,706 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,75,46,25,710 (175.46) கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 37,901 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,21,24,284 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து குணமடைந்தோர் விகிதம் 98.33% சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,02,131 ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 1.93% சதவிகிதமாக உள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 2.12 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 76,01,46,333 (76.01 கோடி) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,31,087 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | காங்கிரஸ் இல்லாமல் 3வது அணி இல்லை: சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.