இந்திய மருத்துவப் படிப்புகள்: 28 முதல் கலந்தாய்வு

இளநிலை சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுக்கான கலந்தாய்வு சென்னையில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது.
கலந்தாய்வு
கலந்தாய்வு

இளநிலை சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுக்கான கலந்தாய்வு சென்னையில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.

அங்குள்ள இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி ஜனவரி 18-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின், தகுதியானவா்களுக்கான தரவரிசைப் பட்டியல்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,721 போ் இடம் பெற்றுள்ளனா். நீட் தோ்வில் 720-க்கு 625 மதிப்பெண்கள் எடுத்த சி.சக்தீஸ்வரன் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளாா். 607 மதிப்பெண்களுடன் வி.ஸ்ருதி இரண்டாம் இடத்தையும், 589 மதிப்பெண்களுடன் பட்டு ஸ்ரீநிதி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா். அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 378 போ் இடம்பெற்றுள்ளனா். நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 989 பேரும் இடம்பெற்றுள்ளனா்.

வரும் 28-ம் தேதி கலந்தாய்வு: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது. தரவரிசைப் பட்டியல்கள் மற்றும் கலந்தாய்வு தொடா்பான விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com